ஹன்சிகாவுக்கு இது ஸ்பெஷல் கிறிஸ்துமஸ்!

ஹன்சிகாவுக்கு இது ஸ்பெஷல் கிறிஸ்துமஸ்!

செய்திகள் 27-Nov-2014 11:37 AM IST Chandru கருத்துக்கள்

நயன்தாராவுக்குப் பிறகு, தற்போது தமிழில் அதிகமான படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை ஹன்சிகாதான். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு படம், சிம்புவுடன் ‘வாலு’, ஆர்யாவுடன் ‘மீகாமன்’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, விஷாலுடன் ‘ஆம்பள’, ஜெயப்ரதாவின் மகனுடன் நடிக்கும் ‘உயிரே உயிரே’, உதயநிதியுடன் ‘இதயம் முரளி’ என பொண்ணு ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறது.

மேற்படி படங்களில் வாலு, மீகாமன், ஆம்பள படங்களின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. அதில் ‘வாலு’, ‘மீகாமன்’ ஆகிய இரண்டு படங்களுமே கிறஸ்துமஸ் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுமே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவரவிருப்பதால் ஹன்சிகா இந்த கிறிஸ்துமஸை ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு, அதற்கடுத்த இரண்டு வாரத்திலேயே பொங்கல் வெளியீடாக ‘ஆம்பள’ படமும் வெளிவரவிருப்பதால் இந்த வருடத்தின் இறுதியும், அடுத்த வருடத்தின் துவக்கமும் ஹன்சிகாவுக்கு உற்சாகமாகவே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீகாமன் டீஸர்


;