தமிழகத்தில் 600 தியேட்டர்களில் ‘லிங்கா’

தமிழகத்தில் 600 தியேட்டர்களில் ‘லிங்கா’

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’வுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியோடு, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ‘லிங்கா’வை உலகம் முழுக்க வெளியிடும் வேலையில் மும்முரமாகியுள்ளனர் இப்படக் குழுவினர். உலகம் முழுக்க இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை பிரபல ‘ஈராஸ்’ நிறுவனம் பெற்றிருக்க, அந்நிறுவனத்திடமிருந்து ‘லிங்கா’வை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை பிரபல ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ‘லிங்கா’வை தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ‘லிங்கா’ தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களில் வெளியாகும் பட்சத்தில் அது ரஜினி மற்றும் இப்படக்குழுவினருக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;