முதல்முறையாக பாரதிராஜா - யுவன் கூட்டணி!

முதல்முறையாக பாரதிராஜா - யுவன் கூட்டணி!

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST VRC கருத்துக்கள்

‘இயக்குனர் இமயம்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா கடைசியாக ‘அன்னக்கொடி’ படத்தை இயக்கினார். அதன் பிறகு இயக்கத்திற்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, ‘பாண்டியநாடு’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ‘சிறந்த குணச்சித்திர நடிகர்’ விருதை வென்ற அவரைத்தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்.

இப்போது மீண்டும் இயக்கம், நடிப்பு என ‘ஓம்’ படம் மூலம் பிஸியாகிவிட்டார் பாரதிராஜா. எட்டு வருடங்களுக்கு முன்பே அவர் உருவாக்கி வைத்திருந்த கதையைத்தான் இப்போது ‘ஓம்’ (ஓல்டு மேன்) படமாக எடுக்கிறாராம்.

இந்தியாவிலிருந்து ரிட்டையர்டாகி அமெரிக்கா செல்லும் முதியவர் ஒருவருக்கும், அமெரிக்காவிலேயே வசிக்குமு சின்ன வயது பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் இப்படத்தின் கதை. வயதான கேரக்டரில் பாரதிராஜாவே கதையின் நாயகனாக நடிக்கிறார். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதல் முறையாக ‘இயக்குனர் இமய’த்துடன் கூட்டணி அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - டீசர்


;