உற்சாகத்தில் உதயநிதி!

உற்சாகத்தில் உதயநிதி!

செய்திகள் 27-Nov-2014 10:13 AM IST Chandru கருத்துக்கள்

தன் தயாரிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ படத்தின் க்ளைமேக்ஸில் லேசாக தலைகாட்டி தனக்குள் இருந்த நடிகனை வெளிப்படுத்தினார் உதயநிதி. பின்னர் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து ஹீரேவாகவும் ரசிகர்கள் மத்தியில் ‘டபுள் ஓகே’ வாங்கினார். பந்தா இல்லாத அவரது நடிப்பும், ஹீரோயிஸம் காட்டாத அவரது அறிமுகமும் ‘இது கதிர்வேலன் காதல்’ மூலம் அடுத்த கட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றது. இப்போது ‘நண்பேன்டா’ மூலம் தனது மூன்றாவது அடியை அழுத்தமாக எடுத்து வைக்க இருக்கிறார் உதயநிதி.

இன்று (நவ 27) உதயநிதியின் பிறந்தநாள். அதை முன்னிட்டு ‘நண்பேன்டா’ படத்தின் வித்தியாசமான ‘மேக்கிங் வீடியோ ஸ்டைல்’ டீஸர் வெளிவந்து இணையதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. பிறந்தநாள் சந்தோஷத்தில் இருக்கும் உதயநிதிக்கு, ‘நண்பேன்டா’ டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உதயநிதி இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்ற எதிர்பார்ப்போடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறது ‘டாப் 10 சினிமா’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;