‘திகில்’ பங்களாவில் மாட்டிக்கொண்ட ஷெரின்!

‘திகில்’ பங்களாவில் மாட்டிக்கொண்ட ஷெரின்!

செய்திகள் 27-Nov-2014 10:01 AM IST VRC கருத்துக்கள்

திகில் பட வரிசையில் விரைவில் ரிலீசாகவிருக்கும் மற்றொரு படம் ’திகில்’. ‘மிராக்கிள் மூவி மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள இபடம் தமிழ், கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் கதையை கொண்ட இப்படத்தில் அசோக், ஷெரின் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ள சந்தோஷ் கொடன்கேரி ‘திகில்’ குறித்து பேசும்போது,

‘‘தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஷெரினுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திடீரென்று சில நாட்கள் அவருக்கு விடுமுறை கிடைக்க, தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவரை பார்க்க அவரிடம் சொல்லாமல் செல்ல முடிவு செய்கிறார். சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற இடத்தை வந்தடைகிறார் ஷெரின். கூர்க் மலை பிரதேசம் என்பதால் இரவு பயணத்தை தவிற்பதற்காக வாடகை வீடு ஒன்றில் தங்குகிறார். அங்கு அவருக்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் அந்த வீட்டில் ஒரு இடத்தில் துப்பாக்கி மற்றும் பழைய கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். விடிவதற்கு முன்பு அவர் அந்த வீட்டில் சந்திக்கும் திகில் அனுபவங்கள் தான் படம்’’ என்றார்.
இப்படத்தின் பாடல்களை அண்ணாமலை எழுதியிருக்க, அஸ்லிமண்டோனிகா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (26-11-14) சென்னியில் நடந்தது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உனக்கென்ன வேணும் சொல்லு - டிரைலர்


;