ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை!

ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை!

செய்திகள் 26-Nov-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக சச்சின், வேலாயுதம் படங்களிலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷுக்கு ஜோடியாக ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘துஜே மேரி கஸம்’ படத்தில் ஜெனிலியாவும், ரிதேஷும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திய ஜெனிலியா கர்ப்பம் தரித்திருந்தார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரிதேஷ் தேஷ்முக்.

வாழ்த்துக்கள் ஜெனிலியா - ரிதேஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 மேக்கிங் - வீடியோ


;