10 ஆண்டுக்கு முன்பே நடந்த விஜய்-சுதீப் சந்திப்பு!

10 ஆண்டுக்கு முன்பே நடந்த விஜய்-சுதீப் சந்திப்பு!

செய்திகள் 26-Nov-2014 10:13 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் படத்தின் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஈசிஆரில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக ஸ்ரீதேவி மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார் ‘நான் ஈ’ புகழ் சுதீப் சென்னையில் முகாமிட்டிருக்கிறார்கள். ‘விஜய் 58’ படம் குறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுதீப், விஜய்யுடனான தனது அனுபவங்களை அதில் பகிர்ந்திருக்கிறார். அதாவது, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே விஜய்யை சந்தித்திருக்கிறாராம் சுதீப். 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மதுர’ படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் விஜய்யும் சுதீப்பும் சந்தித்துக் கொண்டார்களாம்.

‘மதுர’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரக்ஷிதா, கன்னட படம் ஒன்றில் ‘சுதீப்’புக்கும் ஜோடியாக அப்போது நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த இரண்டு படங்களுக்குமான ஷூட்டிங் ஒரே இடத்தில் நடைபெற்றபோது, சுதீப்பை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரக்ஷிதா. அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும், இரண்டு வருடங்கள் கழித்து பிரபுதேவா கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பின்னர், ‘விஜய் 58’ படத்திற்காக படப்பிடிப்பில் தற்போது சுதீப்பை சந்தித்த விஜய், தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருக்கிறார். விஜய் இனிமையானவர் என்றும், எளிமையானவர் என்றும் புகழ்ந்திருக்கிறார் சுதீப்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;