‘லிங்கா’வுக்கு U, கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

‘லிங்கா’வுக்கு U, கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

செய்திகள் 26-Nov-2014 9:56 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி ரசிகர்களிடத்தில் மட்டுமல்ல, அனைத்து சினிமா ரசிகர்களிடையேயும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம் ‘லிங்கா’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, ஜெகபதி பாபு, தேவ்கில், விஜயகுமார், சந்தானம் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தயாரிப்புக்கு ராக்லைன் வெங்கடேஷ். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு ரத்னவேலு, கலைக்கு சாபுசிரில் என பல பெரும் சாதனையாளர்கள் இணைந்துள்ள ‘லிங்கா’ நேற்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. ‘லிங்கா’வை பார்த்த செனசார் அதிகாரிகள் படத்திற்கு க்ளீன் ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘லிங்கா’ திட்டமிட்டபடி ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி விட்டது.

சாதரணமாக ரஜினியின் பிறந்த நாள் என்றாலே ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி பண்டிகை மாதிரி! வழக்கமாக படங்கள் ரிலீசாகும் நாள் வெள்ளிக் கிழமை! இந்த வருடத்தில் ரஜினியின் பிறந்த நாள் அதே வெள்ளிக் கிழமை வருவதாலும், அன்றைய தினம் ரஜினி நடித்த ‘லிங்கா’ படம் ரிலீசாக இருப்பதாலும் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார்கள்! ஆக ரஜினியின் ‘லிங்கா’வின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அதிக பிரதிகளுடன் உலகம் முழுக்க வெளியாக இருக்கும் ‘லிங்கா’வின் விநியோக உரிமையை பிரபல ‘ஈராஸ்’ நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிட்த்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;