அஜித்தைப் போல் ‘ரிஸ்க்’ எடுக்கும் அனுஷ்கா!

அஜித்தைப் போல் ‘ரிஸ்க்’ எடுக்கும் அனுஷ்கா!

செய்திகள் 25-Nov-2014 12:24 PM IST Chandru கருத்துக்கள்

தான் ஒரு முன்னணி நடிகராக இருந்தபோதும், தன் உடம்பில் ஏகப்பட்ட ஆபரேஷன் செய்து கொண்டவராக இருந்தாலும், தன் படத்தின் சண்டைக் காட்சிகளின்போதும், சாகஸக்காட்சிகளிலும் எப்போதும் ‘டூப்’பைப் பயன்படுத்தாதவர் அஜித். ‘பில்லா’வின் கார் சேஸிங், ‘மங்காத்தா’வின் பைக் சேஸிங், ‘பில்லா2’வின் ஹெலிகாப்டர் ஃபைட், ‘ஆரம்பம்’ படத்தின் ‘கார் ஜம்ப்’பிங், ‘வீரம்’ படத்தின் டிரெயின் ஃபைட் என இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம். தற்போது ‘என்னை அறிந்தால்...’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவும் ‘ரிஸ்க்’கான காட்சிகளில் டூப் வேண்டாம் என்று மறுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறாராம்.

இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படமாக உருவாகிவரும் ‘ருத்ரம்மாதேவி’ தெலுங்கு படத்திற்காகதான் இந்த ‘ரிஸ்க்’கை எடுத்திருக்கிறாராம் அனுஷ்கா. ஹீரோக்களே செய்யத் தயங்கும் பல சாகஸங்களை இப்படத்திற்காக அனுஷ்கா செய்திருக்கிறாராம். படம் ஆரம்பிக்கும் முன்பே 5 மாதங்கள் பயிற்சி எடுத்து குதிரையேற்றம் கற்றுக் கொண்டவர், வாள் பயிற்சியும் எடுத்திருக்கிறாராம். அதோடு 150 அடி உயரத்தில் கயிற்றில் தொங்குவது போன்ற ஒரு காட்சிக்கு ‘டூப்’ போட்டுவிடலாம் என இயக்குனர் குணசேகர் எவ்வளவோ வலியுறுத்தியும், அதை மறுத்து அந்தக் காட்சியில் அவரே நடித்து அசத்தினாராம். சமீபத்தில்கூட சண்டைக்காட்சி ஒன்றின்போது அனுஷ்காவிற்கு மணிக்கட்டில் அடிபட்டது. ஆனால் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் 100% முழு உழைப்பை ‘ருத்ரம்மாதேவி’க்காக அனுஷ்கா கொடுக்கிறார் என யூனிட்டில் உள்ளவர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;