‘ஆம்பள’யில் ‘பொம்பள’ போலீஸாம் ஹன்சிகா!

‘ஆம்பள’யில் ‘பொம்பள’ போலீஸாம் ஹன்சிகா!

செய்திகள் 25-Nov-2014 11:15 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா, வைபவ், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் ‘ஆம்பள’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. பொங்கல் ரிலீஸை முன்னிட்டு படப்பிடிப்பும், எடிட்டிங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தள ஸ்டில்களை ஹன்சிகா, சதீஷ், குஷ்பு சுந்தர்.சி உள்ளிட்டோர் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். போலீஸ் உடையுடன் இருக்கும் ஹன்சிகாவுடன், தான் எடுத்த ‘செல்ஃபி’ போட்டோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார் நடிகர் சதீஷ். ஏவிஎம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை ‘ஆம்பள ஷூட்டிங் ஸ்பாட்டில் பொம்பள போலீஸுடன்’ என்ற வாசகங்களுடன் சதீஷ் பதிவேற்றம் செய்திருப்பதால் ஹன்சிகா இப்படத்தில் போலீஸாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;