ஹிந்தி ‘மகதீரா’வில் ஷாகித் கபூர்!

ஹிந்தி ‘மகதீரா’வில் ஷாகித் கபூர்!

செய்திகள் 25-Nov-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படம் ‘மகதீரா’. ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. ராம்சரண் தேஜா நடித்த கேரக்டரில் பாலிவுட்டின் சாக்லெட் ஹீரோ ஷாகித் கபூர் நடிக்கிறார். சல்மான்கான் நடித்த ‘கிக்’ படத்தை இயக்கிய சாஜித் நதியாதால இப்படத்தை இயக்குகிறார். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராஃபிக்ஸ் காட்சிகளுடனும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடனும் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த ‘மகதீரா’ படம் போலவே ஹிந்தியிலும் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனராம். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு அரம்பமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 தமிழ் - டிரைலர்


;