பேரரசுவின் ‘திகாரி’ல் கிரண்பேடி!

பேரரசுவின் ‘திகாரி’ல் கிரண்பேடி!

செய்திகள் 25-Nov-2014 10:00 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்த, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்கள் உட்பட பல படங்களை இயக்கிய பேரரசு தற்போது இயக்கியுள்ள படம் ‘திகார்’. மலையாளத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘சாம்ராஜ்யம்’ படத்தின் தொடர் கதையாக ‘திகார்’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் உன்னி முகுந்தன் கதையின் நாயகனாக நடிக்க இவருடன் பார்த்திபன், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் இந்திய அளவில் உயர் போலீஸ் அதிகாரியாக விளங்கிய கிரண்பேடி இசையை வெளியிட, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகச் செம்மல் வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசு சி.வா.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;