மைக்கேல் ஜாக்ஸனுக்கு மரியாதை செய்யும் ‘மாஸ்’ டீம்!

மைக்கேல் ஜாக்ஸனுக்கு மரியாதை செய்யும் ‘மாஸ்’ டீம்!

செய்திகள் 25-Nov-2014 9:40 AM IST Chandru கருத்துக்கள்

‘பிரியாணி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவும், ‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தற்போது ‘மாஸ்’ படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள். முதல்முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருக்கிறார். வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய 5 படங்களோடு சேர்த்து 6வது முறையாகவும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏற்கெனவே சூர்யாவின் 7 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன்.

இந்நிலையில், தன்னுடைய ஃபேவரைட் ஜாம்பவானான மைக்கேல் ஜாக்ஸனுக்கு மரியாதை செய்யும்விதமாக ‘மாஸ்’ படத்தின் பாடல் ஒன்றில் அவருடைய புகழ்பெற்ற வரிகளை பயன்படுத்த இருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா. மறைந்த மைக்கேல் ஜாக்ஸனின் சூப்பர்ஹிட் ஆல்பமான ‘த்ரில்லரி’லிருந்துதான் சில வரிகளை தங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என வெங்கட் பிரபுவும், யுவனும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

சூர்யாவுடன் நயன்தாரா, எமி ஜாக்ஸன், பிரேம்ஜி அமரன், ஜெயராம், சமுத்திரக்கனி, வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த ‘மாஸ்’ படத்தில் நடிக்கிறார்கள். பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் 2015 சம்மர் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;