1 படம்... 5 கதை!

1 படம்... 5 கதை!

செய்திகள் 25-Nov-2014 9:04 AM IST VRC கருத்துக்கள்

ஒரு கதை, இரண்டு கதைகளை கொண்ட படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு படத்தில் 5 கதைகளை கொண்ட படங்களை நாம் பார்த்திருக்கிறோமா? இல்லையென்றால் அப்படியொரு படத்தை நாம் விரைவில் பார்க்கப் போகிறோம்! அந்த படம் ‘கே.டி.வி.ஆர். கிரியேட்டீவ் ஃப்ரேம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள ‘ஆ’. ‘அம்புலி 3டி’ எனும் வித்தியாசமான படத்தை தந்த படக்குழுவினரின் அடுத்த படைப்பு தான் ‘ஆ’.

‘‘ஆ’ தமிழ் சினிமாவின் முதல் ஹாரர் ஆந்தாலஜி படம் இது’’ என்கிறார்கள் இப்படத்தை இயக்கியுள்ள ஹரியும், ஹரிஷும்! கடலுக்கடியில் நடக்கும் ஒரு திகில் சம்பவம், ஹைவேயில் நடக்கும் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவங்கள் என இப்படத்தில் ஐந்து சம்பவங்களை, ஐந்து கதைகளாக சித்தரித்துள்ளனர் இயக்குனர்கள் ஹரியும் ஹரிஷும். ‘‘அம்புலி 3டி’ படம் எப்படி உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோ அதைவிட பல மடங்கு வித்தியாசமான திகில் அனுவபங்களை இப்படம் தரும்’’ என்கிறார்கள் இயக்குனர்கள்!

இப்படத்தில், ‘அம்புலி’ கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் நடித்திருக்க, சதீஷ்.ஜி. ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.வெங்கட் பிரபு ஷங்கர் இசை அமைக்க, பின்னணி இசைக்கு சாம் சி.எஸ்., சிறப்பு சப்தங்களுக்கு அருண் சீனு, ஆடியோகிராஃபிக்கு சிவகுமார் என பெரிய ஒரு டீமே இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படம் வருகிற 28-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;