இறுதிகட்டத்தில் மணிரத்னம் படம்!

இறுதிகட்டத்தில் மணிரத்னம் படம்!

செய்திகள் 24-Nov-2014 3:37 PM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம், மாதவன், ஷாலினி நடித்த ‘அலைபாயுதே’ படப் பாணியில் ரொமான்டிக் காதல் கதையாம்! ‘ஓகே கண்மணி’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். அதை அவர் செயலிலும் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படம் என்றால் அதற்கு நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஆனால் இப்படத்தை பொறுத்தவரையில் மணிரத்னம் படு ஸ்பீடாகவே செயல்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறாது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மணிரத்னம் தயாரித்த ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமான கனிகா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடலை - டிரைலர்


;