‘24’ அதிகாரபூர்வ டிசைனா? - விக்ரம் குமார்

‘24’ அதிகாரபூர்வ டிசைனா? - விக்ரம் குமார்

செய்திகள் 24-Nov-2014 12:57 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து விக்ரம் கே.குமார் இயக்கும் ‘24’ என்ற படத்தில் நடிக்கிறார். விக்ரம் கே.குமார் - சூர்யா முதன் முதலாக இணையும் இப்படத்திற்கு ‘24’ என்று பெயர் வைத்ததையும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார், வினோத் ஒளிப்பதிவு செய்கிறார் போன்ற தகவல்களை முதன் முதலில் நமது ‘டாப் 10 சினிமா’ இணையதளம் தான் வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக ‘24’ படத்திற்கான அதிகாரபூர்வ டைட்டில் லோகோ என்ற பெயரில் டிசைன் ஒன்று இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் இயக்குனர் விக்ரம் கே. குமாரை ஃபோனில் தொடர்புகொண்டு விசாரித்தபோது அது அதிகாரபூர்வ டிசைன் இல்லை என்ற தகவலை நமக்கு தெரிவித்தார். ஆனால் அந்த டிசைன் தனது பார்வைக்கு வந்ததாக கூறிய விக்ரம் கே.குமார், இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல்களை இரண்டு வாரம் கழித்து வெளியிடவிருப்பதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;