‘‘அஜித், அனுஷ்காதான் என் சாய்ஸ்!’’ - சுனைனா

‘‘அஜித், அனுஷ்காதான் என் சாய்ஸ்!’’ - சுனைனா

செய்திகள் 24-Nov-2014 12:18 PM IST Chandru கருத்துக்கள்

கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சுனைனா நடித்த ‘வன்மம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதியும் ஹீரோவாக நடித்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ‘சமர்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து சுனைனா நடிப்பில் ‘வன்மம்’ படம் வெளியாகியிருக்கிறது. விரைவில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ள ‘நம்பியார்’ படமும் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், ‘வன்மம்’ படத்தில் தன் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறார் சுனைனா. இந்த சந்தோஷத்தை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு ‘ட்விட்டரில்’ அவர்களுடன் உரையாடி வருகிறார். ‘‘நீங்கள் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?’’ என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ‘‘காதலில் விழுந்தேன்!’’ என்று தெரிவித்தார். அதேபோல் இன்னொரு ரசிகர், ‘‘எந்த நடிகரை திரையில் பார்க்கும்போது சூப்பராக இருக்கும்? கோலிவுட்டில் எந்த நடிகை மிகவும் அழகாக இருக்கிறார்?’’ என கேள்வி கேட்டார்.

அதற்கு, ‘‘அஜித் சார்... அனுஷ்கா!’’ என பதில் சொல்லியிருக்கிறார் சுனைனா. அஜித்தின் திரையுலக ரசிகர் பட்டியலில் சுனைனாவும் இணைந்துவிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;