தமிழுக்கு கமல்ஹாசன், ஹிந்திக்கு அஜய் தேவ்கன்!

தமிழுக்கு கமல்ஹாசன், ஹிந்திக்கு அஜய் தேவ்கன்!

செய்திகள் 24-Nov-2014 11:36 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திருசியம்’ கன்னடம், தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் ஆகி ரிலீசானதோடு, கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் தமிழிலும் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷண் வேலைகள் நடந்து வரும் ‘பாபநாசம்’ அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால், தமிழில் கமல்ஹாசன் நடித்த கேரக்டரில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். மலையாள ‘திருசிய’த்தை இயக்கிய ஜித்து ஜோசஃப் தான் ‘பாபநாச’த்தை இயக்கியிருக்கிறார். ஆனால் ஹிந்தி ரீ-மேக்கை வேறு இயக்குனர் இயக்கப் போகிறார். மலையாள ‘திருசிய’த்தின் படப்பிடிப்பு நடந்த பகுதிகளிலேயே ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாள ‘திருசியம்’ கதையில் எந்த வித மாற்றங்களையும் செய்யாமல் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் ரீ-மேக் ஆன இப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் கதையில் சில மாற்றங்களை செய்து எடுக்க இருக்கிறார்கள். அதாவது இப்படத்தின் கதையில் முக்கிய கேரக்டராக வரும் கதாநாயகனின் மகள் கேரக்டருக்கு பதிலாக ஹிந்தியில் சகோதரி கேரக்டரை மையப்படுத்தி எடுக்க இருக்கிறார்களாம். இந்த தகவலை ‘திருசியம்’ பட இயக்குனர் ஜித்து ஜோசஃபே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;