27-ஆம் தேதி விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’

27-ஆம் தேதி விஜய் சேதுபதியின் ‘ஆரஞ்சு மிட்டாய்’

செய்திகள் 24-Nov-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி நடித்து, தயாரித்து வரும் படம் ‘ஆரஞ்சு மீட்டாய்’. பிஜு விஸ்வநாத் இயக்கி வரும் இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே வேறு மொழிகளில் ஒரு சில படங்களை இயக்கியுள்ள பிஜு விஸ்வநாத் தமிழில் இயக்கும் முதல் படம் இது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ஷிதா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான கெட்-அப்பிலும் வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலரை வருகிற 27-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் இப்படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;