ஷங்கர் படத்திற்கு விக்ரம் வழங்கிய ‘S’ சர்டிஃபிக்கெட்!

ஷங்கர் படத்திற்கு விக்ரம் வழங்கிய ‘S’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 24-Nov-2014 9:44 AM IST VRC கருத்துக்கள்

‘‘இயக்குனர் ஷங்கர் சாருக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அப்படம் உலகிற்கு பிடித்து விட்டது மாதிரி. அந்த வகையில் அவரது சிஷ்யர் கார்த்திக் இயக்கியுள்ள ‘கப்பல்’ அவருக்கு பிடித்த படம். இந்த படத்திற்கு ‘A’ சான்றிதழ் அல்ல ‘U/A’ சான்றிதழும் அல்ல, ஷங்கர் பிக்சர்ஸின் ‘S’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். ஷங்கர் சார் எனது குரு. அவரது கனவுலகில் இடம் பெற்ற ஒரு அதிர்ஷ்டகார நடிகன் நான். அவருக்கும் எனக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக இருந்து வருகிற நட்பு. இந்த விழாவுக்கு அவர் என்னை அழைத்தார். இதில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி’’ என்றார் விக்ரம்,‘கப்பல்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில்! இயக்குனர் ஷங்கரின் ‘எஸ்.பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;