ஷங்கரின் ‘கப்பல்’ விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

ஷங்கரின் ‘கப்பல்’ விட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 24-Nov-2014 9:40 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கியுள்ள படம் ‘கப்பல்’. வைபவ், புதுமுகம் சோனம் பஜ்வா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். ‘ஐ ஸ்டுடியோஸ் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனதம் தயாரித்துள்ள இப்படத்தை ஷங்கரின் ‘எஸ்.பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்த்து. ஷங்கர் படம் என்பதால் ஆடியோ விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம் உட்பட பல பிபலங்கள் வந்திருந்தனர்.
விழா மேடையில் ஷங்கர் காகிதத்தில் ஒரு கப்பலை செய்தார். அதனை மேடையில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் மிதக்க வைத்து, ஓட விட்டு, ‘கப்பல’ என்ற டைட்டிலுக்கான விளக்கத்தை அளித்தனர். இப்படம் நட்பை பற்றி சித்தரிக்கும் படம் என்பதால மேடையில் பேசிய பெரும்பாலானோரின் பேச்சும் நட்பை பற்றியே அமைந்தது. இயக்குன்ர் ஷங்கர் பேசும்போது,
‘‘கார்த்திக் இயக்கியுள்ள ‘கப்பல்’ படத்தை பார்த்தேன். படம் காமெடியாகவும் வித்தியாசமாகவும் இருந்த்தோடு, எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதை வாங்கினேன். இந்த விழாவிற்கு என் அழைப்பை ஏற்று வந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், விக்ரம் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான், ‘லிங்கா’வின் பின்னணி இசை பணி, இரானிய இயக்குநர் மஜித் இயக்கும் படம் என படு பிஸியாக இருக்கிறார். இருந்தாலும் எனக்கும் அவருக்குமான நல்ல நட்புக்காக இங்கு வந்திருக்கிறார். அவருக்கு நன்றி!

விக்ரமுடைய உழைப்பை நான் எப்படி பாராடுவது என்று தெரியவில்லை. ஐ படத்தில் என்னை விட அவர் தான் நிறைய உழைத்திருக்கிறார். ‘ஐ’ படத்திற்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இப்படத்தில் வரும் கூனன் பாத்திரத்திற்கு வித்தியாசமான குரல் வேண்டும் என்பதற்காக அவர் தனது தொண்டயை இறுக்கப் பிடித்து, ரொம்பவும் கஷ்டப்பட்டு வித்தியாசமாக டப்பிங் பேசியிருக்கிறார். எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு அற்புதமான மனிதர் விக்ரம். ‘அந்நியன்' படத்திற்கு பிறகு அவர் எனது குடும்பத்தில் ஒருவராகி விட்டார். எனது அழைப்பை ஏற்று, இந்த விழாவிற்கு வந்திருக்கிறார். அவருக்கும் நன்றி!

சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்க்கு ஃபோன் செய்து, ‘‘விழாவுக்கு வரமுடியுமா? என்று கேட்ட்தும், உடனே ‘ஒகே’ணா என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கேட்ட உடனே ‘ஓகே’ என்று சொல்லி விட்டீர்களே என்றதற்கு, "என்னங்கண்ணா, நீங்கள் கேட்டால், என்னால் வராமல் இருக்க முடியும்?’ என்றார். அது தான் நட்பு! 'நண்பன்' பட காலத்திலிருந்து விஜய் எனக்கு நண்பனாகி விட்டார். 'நண்பன்' முதல் நாள் படப்பிடிப்பில் பெரிதாக நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்’’ என்றார் ஷங்கர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;