விஜய்யின் நெருங்கிய நண்பர் யார் தெரியுமா??

விஜய்யின் நெருங்கிய நண்பர் யார் தெரியுமா??

செய்திகள் 24-Nov-2014 9:16 AM IST VRC கருத்துக்கள்

‘‘ஷங்கர் சார் ஒரு படத்தை வாங்கியிருக்கிறார் என்றால் அப்படத்தின் வெற்றி நிச்சயமாகி விட்டது என்று அர்த்தம். அந்த வகையில் ‘கப்பல்’ படமும் வெற்றி பெற்றது, அதனை இயக்கியுள்ள கார்த்திக்கும் வெற்றிப் பெற்று விட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த மேடையில் நான் நண்பர் விக்ரமுடன் நிற்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. யாராவது என்னிடம் திரையுலகில் உங்களுடைய நெருங்கிய நண்பர் யார் என்று கேட்டால், நான் உடனே சொல்லுவது கென்னி (விக்ரம்) என்று தான்! அவருடனான நட்பு சினிமாவை தாண்டிய நட்பு. அவரது குடும்பம் எங்களது வீட்டிற்கு வருவது, எனது குடும்பம் அவரது வீட்டிற்கு செல்வது என எங்களது நட்பு குடும்பம் வரை தொடர்கிறது. அதே போல இயக்குநர் ஷங்கர் சாரும் எனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர். அவரை நான் நண்பரை விட குருவாக தான் கருதுகிறேன். 'நண்பன்' படத்தில் அவரது இயக்கத்தில் நடிக்கும் போது அவர் எப்படி பணியாற்றுகிறார் என்பதை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார் விஜய். அவர் இப்படி பேசியது இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்க, ஷங்கர் வாங்கியுள்ள ‘கப்பல்’ பட்த்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;