‘என்னை அறிந்தால்...’ லேட்டஸ்ட் தகவல்கள்!

‘என்னை அறிந்தால்...’ லேட்டஸ்ட் தகவல்கள்!

செய்திகள் 22-Nov-2014 3:51 PM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ ரிலீஸ் இப்போதைக்கு இல்லை என்பதால் தற்போது ரசிகர்களின் பார்வை முழுக்க முழுக்க ரஜினியின் ‘லிங்கா’விலும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்...’ படத்திலும்தான் இருக்கிறது. ‘லிங்கா’வைப் பொறுத்தவரை டீஸர், பாடல்கள், டிரைலர் என அனைத்தும் வெளியாகிவிட்டதால் டிசம்பர் 12ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளார்கள்.

ஆனால், ‘என்னை அறிந்தால்...’ படத்தின் தலைப்பையே ரொம்பவும் காத்திருக்க வைத்துதான் வெளியிட்டார்கள். அதேபோல் இதுவரை இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. முதல் முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பதால், படத்தின் டீஸர் எப்படியிருக்கும், தங்கள் ‘தல’ டீஸரில் எப்படி இருப்பார்? என்ன வசனம் பேசுவார்? முதல்முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்திருக்கும் ஹாரிஸின் பாடல்கள் எப்படியிருக்கும்? என ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வதற்காக தவியாய் தவிக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஒருவழியாக படத்தின் டீஸர், பாடல்கள் வெளியிடுவதற்கான தேதிகளை தற்போது முடிவு செய்துவிட்டதாக ‘என்னை அறிந்தால்’ டீமின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏ.எம்.ரத்னத்தின் ‘ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ்’ நிறுவன சென்டிமென்ட்படி எந்த ஒரு விஷயத்தை வெளியிடுவதாக இருந்தாலும் வியாழக்கிழமைதான் செய்வார்கள். அதேபோல்தான் இந்த டீஸரை வரும் வியாழக்கிழமை அதாவது நவம்பர் 27ஆம் தேதியும், பாடல்களை டிசம்பர் 11ஆம் தேதியும் (இதுவும் வியாழக்கிழமைதான்) வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 8ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;