நவம்பர் 24ல் சென்சார்... நகம் கடிக்கும் ‘லிங்கா’ டீம்!

நவம்பர் 24ல் சென்சார்... நகம் கடிக்கும் ‘லிங்கா’ டீம்!

செய்திகள் 22-Nov-2014 3:40 PM IST Chandru கருத்துக்கள்

ஃபர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்கள், டிரைலர் என பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான ‘லிங்கா’ ஆல்பத்தில் மனோ பாடிய ’மோனா கேசோலினா...’ பாடலும், ரஹ்மான் பாடிய ‘ஓ நண்பனே...’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதோடு ‘ஐ டியூன்’ஸிலும் ‘டாப் 10’ லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது ‘லிங்கா’ ஆல்பம்.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் ‘லிங்கா’ படம், வரும் 24ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி 24ஆம் தேதி சென்சாருக்கு அனுப்புவதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள். ரஜினி படத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் ‘யு’ சர்டிஃபிகேட்தான் கிடைக்கும் என்றாலும், இப்படத்தில் சென்சிடிவ்வான அணை பிரச்சனையை கையிலெடுத்திருப்பதால் சென்சார் அதிகாரிகளின் பதிலுக்காக நகம் கடித்தபடி காத்திருக்கிறது ‘லிங்கா’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;