தனுஷ்... அப்போ இன்ஜினியர், இப்போ டெய்லர்!

தனுஷ்... அப்போ இன்ஜினியர், இப்போ டெய்லர்!

செய்திகள் 22-Nov-2014 3:21 PM IST Chandru கருத்துக்கள்

125 நாட்களைக் கடந்திருக்கிறது வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம். தனுஷ் இன்ஜினியராக நடித்த இப்படத்தை ‘இன்ஜினியர்’களுக்கு சமர்ப்பணம் செய்து இன்றைய ‘யூத்’களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது இந்த ‘விஐபி’. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘அனேகன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளிலும், அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்திலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

இப்படங்களைத் தொடர்ந்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ என்ற படத்தில் நடிக்கிறார். ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் டெய்லராகவும், காஜல் அகர்வால் நூல் விற்கும் பெண்ணாகவும் நடிக்கிறார்களாம்.

மீனவன், பொறியாளன், தையல்காரன் என படத்திற்குப் படம் வித்தியாசமான வேடங்களாக ஏற்று அனைவரையும் வியக்க வைக்கிறார் தனுஷ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;