சரத்குமாருடன் மோதும் பாங்காங் ஆட்கள்!

சரத்குமாருடன் மோதும் பாங்காங் ஆட்கள்!

செய்திகள் 21-Nov-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்திற்காக சமீபத்தில் சென்னை, பெரம்பூர் பின்னி மில்லில் பிரம்மாண்டமான கண்ணாடி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அதில் ஹீரோ சரத்குமாரும், வில்லன் சர்வேஸ்வரன் என்ற வேடத்தில் நடிக்கும் சரத்குமாரும் மோதும் பிரம்மாண்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இதனை ஐந்து காமிராக்கள் கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். இந்த சண்டை காட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் கலைஞர்கள், பாங்காக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட நான்கு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த ஸ்டன்ட் காட்சி பத்து நாட்கள் படமாக்கப்பட்டது. சரத்குமாரை வைத்து ஏற்கெனவே சில படங்களை இயக்கியுள்ள ஏ.வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன், சமுத்திரகனி, ராதாரவி, தம்பி ராமையா என பலர் நடித்திருக்கிறார்கள். தற்போது இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தினை ‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ படங்களை தயாரித்த ‘மேஜிக் ஃபிரேம்’ நிறுவனம் தயாரிக்கிறது. மிக விரைவில் இப்படம் திரைக்கு வருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹலோ நான் பேய் பேசுறேன் - டிரைலர்


;