டிசம்பர் 24ல் சிம்பு தரிசனம் உறுதி!

டிசம்பர் 24ல் சிம்பு தரிசனம் உறுதி!

செய்திகள் 21-Nov-2014 11:02 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ படத்தின் டப்பிங் வேலைகளில் சிம்பு பிஸியாக இருப்பதாகவும், படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து ‘வாலு’ பற்றிய செய்திகள் நேற்று ட்விட்டர் எங்கும் பரவலாக வலம் வந்தன. அதோடு சென்னை டிரென்டிலும் ‘வாலு’ இடம் பிடித்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தன் படம் எதுவும் வரவில்லையென்றாலும், இப்போதும் தன்மீது அதே அளவுக்கு அன்பு வைத்திருக்கும் ரசிகர்களை நினைத்து பெருமிதமாக ‘ட்வீட்’ செய்திருக்கிறார் சிம்பு. அதோடு பொங்கலுக்கு முன்பே சிம்பு தரிசனம் தரவிருக்கிறார் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது ட்வீட்டில் ரசிகர்களைப் பார்த்து ‘‘கண் கலங்க வச்சீட்டீங்க’’ என குறிப்பிட்டிருக்கும் சிம்பு, ‘வாலு’ படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்திற்குப் பின்னர், தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் ‘வாலு’ திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;