கொடைக்கானலில் டூயட் பாடும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா!

கொடைக்கானலில் டூயட் பாடும் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 21-Nov-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்து வரும் ‘வெள்ளக்காரதுரை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் எழில் பேசும்போது, ‘‘வெள்ளைக்கார துரை’ படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா பங்கேற்ற “கூதக் காத்து கொல்லுதடி – கூரச் சேல தாடி...’ என்ற பாடலுடன் முதலிரவு காட்சியை படமாக்கினோம். இது முதலிரவு பாடல் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தினருடன் பார்க்கக் கூடிய பாடலாக இதனை உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இதிலும். ‘வெள்ளக்காரதுரை’ ஜாலியான படமாக இருக்கும்’’ என்றார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள அன்பு செழியன் தனது ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ பேனரில் தயாரிக்கும் இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;