விக்ரம் படத்தின் ரேஸிங் காட்சிக்கு உதவிய அஜித்!

விக்ரம் படத்தின் ரேஸிங் காட்சிக்கு உதவிய அஜித்!

செய்திகள் 21-Nov-2014 10:21 AM IST Chandru கருத்துக்கள்

‘கோலி சோடா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கி வருகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் கார் ரேஸிங் சீன் ஒன்று இருக்கிறதாம். அதற்காக ரேஸிங் அனுபவம் பெற்ற ஒருவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என முடிவு செய்த விஜய் மில்டன் படத்தின் ஸ்டன்ட் இயக்குனரான லீ விட்டோகரிடம் ஐடியா கேட்டிருக்கிறார்.

இந்த லீ விட்டோகர் ஏற்கெனவே அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் பணிபுரிந்தவர். எனவே, அஜித்திற்கு போன் செய்து மேற்படி ரேஸிங் சீனை விளக்கி ஆலோசனை கேட்டிருக்கிறார். அதற்கு, ‘‘நரேன் என்னுடைய நண்பர்தான். நீங்கள் அவரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். என்னைவிட அவரின் ஆலோசனை உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்’’ என்று அஜித் சொல்ல, கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயனிடம் சென்றிருக்கிறது ‘10 எண்றதுக்குள்ள’ டீம்! அஜித் மூலம் வந்ததால், உடனடியாக ஓ.கே. சொன்ன நரேன், அந்த ரேஸிங் காட்சிக்கு தன் அனுபவம் மூலம் நல்ல ஆலோசனைகளை வழங்கினராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;