ஜெட் வேகத்தில் ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’

ஜெட் வேகத்தில் ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’

செய்திகள் 21-Nov-2014 9:34 AM IST Chandru கருத்துக்கள்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா ஹீரோ, ஹரோயினாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, எழுதி இப்படத்தை லக்ஷ்மன் இயக்குகிறார்.

படம் ஆரம்பமாகி 3 மாதங்களுக்குள் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியிருக்கிறது. இளமை துள்ளும் ‘ரொமான்ஸ்’ படமாக உருவாகி வரும் ‘ரோமியோ ஜூலியட்’டின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இமான் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் இப்படத்தின் பெரிய ப்ளஸாக இருக்குமாம். ஜெட் வேகத்தில் வளர்ந்து வரும் இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;