ரசிகர்களை கௌரவப்படுத்திய ரஜினி!

ரசிகர்களை கௌரவப்படுத்திய ரஜினி!

செய்திகள் 21-Nov-2014 8:59 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று (நவம்பர் 20) 45வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வெகு விமரிசையாக ஆரம்பமானது. ஏற்கெனவே அறிவித்தபடி, இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சிறந்த திரையுலக பிரமுகர்’ விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனால் வழங்கப்பட்டது. அப்போது ரஜினி, அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கி அவரை அன்போடு ‘பெரியண்ணா’ என்று அழைத்தார்.

பின்னர் விருது பெற்ற ரஜினி பேசும்போது, ‘‘நான் விருது பெறவே வந்தேன். பேசுவதற்காக வரவில்லை. அதிலும் அமிதாப் பச்சனின் அற்புதமான பேச்சுக்குப் பிறகு, எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. என்னை கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றிகள் பல. இந்த விருதை என படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!’’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;