ஜீவனின் ‘ஜெயிக்கிற குதிரை’

ஜீவனின் ‘ஜெயிக்கிற குதிர’

செய்திகள் 21-Nov-2014 8:42 AM IST VRC கருத்துக்கள்

‘திருட்டுப்பயலே’, ‘நான் அவனில்லை’ படங்கள் உட்பட பல படங்களில் நடித்திருக்கும் ஜீவன் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ஜெயிக்கிற குதிர’. பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஷக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தை ‘பிங்கி புரொடக்‌ஷன்ஸ்’ வழங்க, பியாரிலால் குண்டேச்சா தயாரிக்கிறார். இப்பத்தில் ஜீவனுக்கு ஜோடியாக டிம்பிள் சாப்தே நடிக்க, இவர்களுடன் இரண்டு புதுமுக நடிகைகளும் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் முதன் முதலாக நடிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் துவங்கியது. ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன் தம்பி ராமையா, மனோபாலா, சிங்கம் புலி, கருணாகரன், கோவை சரளா, மயில்சாமி, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படம் சக்தி சிதம்பரம் மற்றும் ஜீவனின் வழக்கமான காமெடி, லொள்ளு, கலாட்டா விஷயங்களுடன் உருவாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;