டிசம்பரில் இசை, ஜனவரியில் படம் - ‘காக்கிச்சட்டை’ பிளான்!

டிசம்பரில் இசை, ஜனவரியில் படம் - ‘காக்கிச்சட்டை’ பிளான்!

செய்திகள் 20-Nov-2014 4:57 PM IST Chandru கருத்துக்கள்

‘எதிர்நீச்சல்’ டீமின் அடுத்த ஆட்டம் ‘காக்கிச்சட்டை’. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபிஸராக நடிக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த ‘காக்கிச்சட்டை’யில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆகிறார் ஸ்ரீதிவ்யா. அதோடு, ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’ படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.

படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ‘காக்கிச்சட்டை’யின் பாடல்களை டிசம்பர் 2ஆம் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு படத்தை வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;