‘டார்லிங்’கில் ‘கிராவிட்டி’ கனெக்ஷன்!

‘டார்லிங்’கில் ‘கிராவிட்டி’ கனெக்ஷன்!

செய்திகள் 20-Nov-2014 4:20 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த ஆண்டு வெளிவந்து உலக சினிமா ரசிகர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றது அல்போன்ஸோ க்வாரான் (Alfonso Cuarón) இயக்கிய ‘கிராவிட்டி’ (Gravity) திரைப்படம். இப்படம் இதுவரை 7 ஆஸ்கர் விருதுகள் உட்பட 191 விருதுகளை வென்று குவித்துள்ளது. அதோடு 114 விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7 ஆஸ்கர் விருதுகளில் இப்படத்தின் பின்னணி இசைக்கும் பங்குண்டு. இப்படத்தின் ஆடியோவை ‘மாஸ்டரிங்’ செய்யப்பட்டது லண்டனில் உள்ள ‘அப்பே ரோடு ஸ்டியோஸ்’ (London abbey road studios) என்ற ஸ்டுடியோவில்தான். தமிழ் சினிமாவில் முதல்முறையாக இந்த ஸ்டுடியோவை ஜி.வி.பிரகாஷ் தன் படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து, இசையமைத்து வரும் ‘டார்லிங்’ படத்திற்காக சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்று ‘சிம்பொனி’ இசையைப் பயன்படுத்தினார். அதோடு இப்படத்தின் ‘மாஸ்டரிங்’ பணியைச் செய்தவர் லண்டனைச் சேர்ந்த ‘அப்பே ரோடு ஸ்டியோஸ்’ நிறுவனத்தின் கிறிஸ்டியன் ரைட்தானாம் (Christian Wright). இதை ஜி.வி.பிரகாஷே ‘ட்வீட்’ மூலம் உறுதி செய்திருக்கிறார்.

‘கிராவிட்டி’ படத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்ப வல்லுவனரை, ‘டார்லிங்’ படத்திற்காக பயன்படுத்தியிருப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;