‘லிங்கா’ புதிய ரெக்கார்டு!

‘லிங்கா’ புதிய ரெக்கார்டு!

செய்திகள் 20-Nov-2014 3:31 PM IST Chandru கருத்துக்கள்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி வெளியான ‘லிங்கா’ டீஸரை இதுவரை 38 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ‘யு டியூப்’பில் கண்டுகளித்துள்ளனர். ரஜினி படத்தைப் பொறுத்தவரை இதுவரை ‘கோச்சடையான்’ படமே அதிகபட்சமாக 48 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த சாதனையை விரைவில் ‘லிங்கா’ டீஸர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ‘லிங்கா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ‘டிரைலரு’ம் வெளியிடப்பட்டது. தற்போது 5 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை ‘லிங்கா’ டிரைலரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 5 நாட்களிலேயே இவ்வளவு பேர் பார்த்திருப்பதால், அனேகமாக ‘கோச்சடையான்’ சாதனையை இந்த டிரைலரும் முறியடிக்க வாய்ப்புள்ளது.

என்றாலும்... தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் டீஸர்தான் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை அந்த டீஸரை 85 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த சாதனையை முறியடிப்பது தற்போதைய சூழலில் சந்தேகமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;