‘வீரம்’ சென்டிமென்ட் ‘வன்மம்’ படத்தில் தொடருமா?

‘வீரம்’ சென்டிமென்ட் ‘வன்மம்’ படத்தில் தொடருமா?

செய்திகள் 20-Nov-2014 11:49 AM IST Chandru கருத்துக்கள்

‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘வன்மம்’, ‘நானும் ரௌடிதான்’ என இன்றைய தேதியில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கோலிவுட் ஹீரோ விஜய் சேதுபதிதான். இந்த 6 படங்கள் கொண்ட பட்டியலில் முதல் ரிலீஸாக நாளை (நவ 21) வருகிறது ‘வன்மம்’ படம். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். இவர் கமலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவராம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முழுக்க முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் வலம் வருகிறாராம். இந்த வருடப் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘வீரம்’ படம் முழுவதும் அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையுடன்தான் வலம் வந்தார். அஜித்தின் ‘வீரம்’ சென்டிமென்ட் விஜய்சேதுபதியின் ‘வன்மம்’ படத்திற்கும் தொடர வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;