தல கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!

தல கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!

செய்திகள் 20-Nov-2014 11:00 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து தற்போது ‘யட்சன்’ படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவும் நடிக்கிறார். பிரபல வாரஇதழில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதை ஒன்றையே ‘யட்சன்’ படமாக உருவாக்கி வருகிறார்கள். ‘யுடிவி’ மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிவிட்டது.

இப்படத்தில் நடிகர் ஆர்யா, அஜித் ரசிகர் மன்றத் தலைவராக நடிக்கிறார். இதனால் படத்தின் ஒரு காட்சியில் ‘வீரம்’ படத்தின் மிகப்பெரிய கட்அவுட் ஒன்றின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ‘தல’ ரசிகர்கள் ஆர்ப்பரித்து கைதட்டி ரசித்தனர். ஏற்கெனவே ‘ஆரம்பம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த ஆர்யா, தற்போது இந்த ‘யட்சன்’ படத்தில் அவரது ரசிகராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;