எச்சரித்த சரத்குமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்!

எச்சரித்த சரத்குமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்!

செய்திகள் 20-Nov-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

நேற்று திருச்சியில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சரத்குமாரிடம் நடிகர் விஷால் பற்றி கேட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ‘‘நடிகர் விஷால் நடிகர் சங்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நடிகர் விஷால் இது மாதிரி தொடர்ந்து நடிகர் சங்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் பட்சத்தில் விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.

நடிகர் சரத்குமார் கூறிய இந்த கருத்துக்கு நடிகர் விஷால் பதில் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,
‘‘நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் கூறியுள்ள கருத்து என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் கூறிய கருத்துக்களில் உண்மையில்லை. ஒரு நடிகராக எனக்கு நடிகர் சங்கத்திலுள்ள அனைத்து உறுப்பினர்கள் மீதும் மிக்க மரியாதை உண்டு. நடிகர் சங்க உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் என்னுடைய முழு ஆதரவு உண்டு.

திரு.சரத்குமார் கூறிய படி நான் நடிகர் சங்கம் குறித்து பேசிய தகவல்கள் என்ன என்பதற்கு தகுந்த ஆதாரங்களை எனக்கு தரும்படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். நடிகர் சங்க செயலாளர் திரு.ராதாரவியும், துணை தலைவர் திரு.காளையும் கூறிய வார்த்தைகள் ஒரு நடிகராக என்னை மிகவும் வேதனையடைய வைத்தது. சங்கத்தின் விதி எண் 13-ன் படி எந்த ஒரு சங்க உறுப்பினரும் சக உறுப்பினரை பற்றி அவதூறாகவோ மனம் புண்படும் படியோ பேசினால் அந்த நடிகரை தண்டிக்க சங்கத்திற்கு உரிமை உண்டு.

நடிகர் குமரிமுத்துவை கூட இதே சட்டவிதியின்படி இந்த சங்கம் நீக்கியது. இதே போலதான் ராதாரவியும், காளையும் பேசியிருக்கிறார்கள். அவர்கள் மீதும் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்தின் விதிகளின் படி சங்கத்தில் அனைவருக்கும் ஒரே நீதியெனில் நடிகர் சங்கத்தின் செயலாளர் திரு.ராதாரவியும், துணை தலைவர் திரு. என்.காளையும் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டியவர்கள் தான்’’ என்று அந்த அறிக்கையில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;