‘‘எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்!’’ - ரஜினி குற்றச்சாட்டு

‘‘எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்!’’ - ரஜினி குற்றச்சாட்டு

செய்திகள் 20-Nov-2014 10:14 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘லிங்கா’ படத்தின் கதை மீது குற்றம் சுமத்தி, படத்தைத் தடை செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் ‘முல்லைவனம் 999’ என்ற படத்தின் இயக்குனர் ரவிரத்னம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ரஜினி உட்பட ‘லிங்கா’ படக்குழுவைச் சார்ந்த 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதோடு வழக்கை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதாசிரியர் பொன் குமரன் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் எதிர் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில்...

“இந்த வழக்கை மனுதாரர் கெட்ட எண்ணம் மற்றும் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. குறிப்பிட்ட பகுதிகளுக்கு நான், ‘லிங்கா’ படத்தின் வினியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. மற்ற பகுதிகளின் வினியோகஸ்தர்களை வழக்கில் சேர்க்கவில்லை.

இதன்மூலம் மனுதாரரின் கெட்ட எண்ணம் நன்றாக தெரியும். எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘லிங்கா’ படத்தில் நான் நடித்துள்ளதைத் தவிர வேறு எந்த பங்களிப்பும் எனக்கு கிடையாது!’’ என்பன போன்ற விஷயங்களைக் குறிப்பிட்டு மேற்படி ரவிரத்னத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் ரஜினி.

நேற்றைய விசாரணையின் முடிவில், இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் டி.ஜி.பி., பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி. அதோடு, விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;