விஜய் ரொம்பவும் எளிமையானவர்! - ஸ்ரீதேவி புகழாரம்

விஜய் ரொம்பவும் எளிமையானவர்! - ஸ்ரீதேவி புகழாரம்

செய்திகள் 20-Nov-2014 9:06 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதன் மூலம் 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. கடைசியாக 1986ஆம் ஆண்டு வெளிவந்த ‘நான் அடிமை இல்லை’ என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இதுவே அவரது கடைசி தமிழ்ப் படம். அதன் பிறகு 2012ஆம் ஆண்டு ஸ்ரீதேவி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் தமிழில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய்யுடன் நடிப்பது குறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு ஸ்ரீதேவி பேட்டியளித்துள்ளார். அதில்,

‘‘சிம்புதேவன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. என் கதாபாத்திரத்தை ரொம்பவும் ரசித்தேன். தென்னிந்தியாவின் பெரிய கதாநாயகர்களில் விஜய்யும் ஒருவர். மிகப்பெரிய ஸ்டாராக விஜய் இருந்தாலும், அவருடைய எளிமையான குணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதனால்தான் இப்படத்தில் நடிக்க நான் சம்மதித்தேன். இப்படத்தில் எனக்கு என்ன கேரக்டர் என்பது பற்றி இப்போதைக்கு சொல்வது சரியாக இருக்காது. ஆனால், உடையலங்காரத்துக்கு முக்கியத்துவம் உள்ள மிகப்பெரிய படம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!’’ என்று விஜய்யைப் பாராட்டியதோடு, இப்படத்தில் நடிக்க காரணம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார் ஸ்ரீதேவி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;