ஐஸ்வர்யா ராயால் மறக்க முடியாத நாள்!

ஐஸ்வர்யா ராயால் மறக்க முடியாத நாள்!

செய்திகள் 19-Nov-2014 4:06 PM IST VRC கருத்துக்கள்


நவம்பர் 19, நடிகை ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையில் அவரால் மறக்க முடியாத நாள்! இந்த நாளில் தான் அவர் உலக அழகி பட்டம் பெற்றார். தென் ஆப்ரிக்கா நாட்டிலுள்ள சன் சிட்டியில் சரியாக 20 வருடங்களுக்கு முன் நடந்த உலக அழகிப் போட்டியில் சிறந்த உலக அழகியாக பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய், பிறகு சினிமாவிலும் பிரவேசித்து உலகப் புகழ் பெற்றார். ஒவ்வொரு வருட உலக அழகிப் போட்டிகளிலும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த பலர் சிறந்த அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்தியாவை பொறுத்தவரையில் இதுவரை தேர்வான அழகிகளில் ஐஸ்வர்யா ராய்க்கு தனி ஒரு இடம் உண்டு! திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் ஆனார் என்றாலும் இன்னமும் தனது அழகை பேணி காத்து வருவதில் ஐஸ்வர்யா ராய்க்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;