டிசம்பர் 5-ல் ‘ஆம்பள’ சிங்கிள் டிராக்!

டிசம்பர் 5-ல் ‘ஆம்பள’ சிங்கிள் டிராக்!

செய்திகள் 19-Nov-2014 12:04 PM IST VRC கருத்துக்கள்

‘பூஜை’யை தயாரித்து, நடித்து, வெளியிட்ட விஷால் அடுத்து நடிக்கும் படம் ‘ஆம்பள”. சுந்தர்.சி.இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், குஷ்புவின் ‘ஆவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்து, இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்காக ஆதி இசை அமைத்த ஒரு பாடலை அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, வைபவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் ‘மதகஜராஜா’ படத்தில் நடித்துள்ள விஷால், சுந்தர்.சி.இயக்கத்தில் நடிக்கும் இரண்டாவது படம் ‘ஆம்பள’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;