‘அவள் அப்படித்தான்’ இயக்குனர் மறைவு!

‘அவள் அப்படித்தான்’ இயக்குனர் மறைவு!

செய்திகள் 19-Nov-2014 10:58 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கிய ருத்ரையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் இப்படமும் ஒன்று! இப்படக் கதையில் மைய பாத்திரமாக ஸ்ரீப்ரியாவின் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் மாறுபட்ட, துணிச்சல் மிக்க, நவீன சிந்தனை கொண்ட பெண்ணாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். இதனால் அந்த காலகட்டத்தில் வெளியான மற்ற படங்களிலிருந்து இப்படம் தனித்து பேசப்பட்டது. நடிகர் கமல்ஹாசனுக்கு பிடித்த இயக்குனர்களில் ருத்ரையாவும் ஒருவர்! இதனை கமல்ஹாசன் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ருத்ரையாவின் புகழ் தமிழ் சினிமா இருக்கும் காலம் வரை நீடிக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;