தனுஷின் தீவிர ரசிகராம் பாலிவுட் இயக்குனர் பால்கி!

தனுஷின் தீவிர ரசிகராம் பாலிவுட் இயக்குனர் பால்கி!

செய்திகள் 19-Nov-2014 10:28 AM IST Chandru கருத்துக்கள்

‘ரான்ஜ்னா’ படத்தைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என ‘கோலிவுட்’ வட்டராங்கள் பலரும் இப்படத்தில் பணிபுரிகிறார்கள்.

இப்படம் உருவான விதம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இயக்குனர் பால்கி, அமிதாப்பின் 69வது பிறந்த நாள் பரிசாக எதை வாங்கிக் கொடுப்பது எனத் தெரியாமல் கடைசியில் தன்னிடமிருந்த கதையைச் சொல்ல, அமிதாப்பிற்கு அது பிடித்துப்போகவே அதையே அவரின் பிறந்தநாள் பரிசாக ஆக்கினாராம் பால்கி. இப்படி உருவானதுதானாம் ‘ஷிமிதாப்’.

‘ஷமிதாப்’பின் முழு திரைக்கதையும் உருவான பின்னர், இரண்டு நாயகர்களைப் பற்றிய இந்த கதையில் ஒரு நாயகனாக அமிதாப்பை முடிவு செய்த பால்கி, இன்னொரு நாயகனாக தனுஷை ஒப்பந்தம் செய்தார். ஏனென்றால், ‘காதல் கொண்டேன்’ படத்திலிருந்தே தனுஷின் தீவிர ரசிகராம் பால்கி. அதோடு, நடிகர் தனுஷ் தனித்துவமான நடிகர் என்றும், வேறெந்த நடிகரின் பிரதிபலிப்பும் அவருடைய நடிப்பில் இல்லை எனவும் புகழ்ந்திருக்கிறார் அவர். ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்ததற்கான காரணம் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் தெரிய வரும் என்றும் கூறியிருக்கிறார் பால்கி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;