‘குற்றம் கடிதலு’க்கு இன்னும் ஒரு கௌரவம்!

‘குற்றம் கடிதலு’க்கு இன்னும் ஒரு கௌரவம்!

செய்திகள் 19-Nov-2014 10:23 AM IST VRC கருத்துக்கள்

ரிலீசாவதற்கு முன்னதாகவே சிறந்த திரைப்படம் என்ற பாராட்டை பெற்றுள்ள படம் ‘குற்றம் கடிதல்’. ஜி.பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படம் ஜிம்பாவே திரைப்பட விழா மற்றும் மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ள நிலையில் அடுத்து கோவாவில் நடைபெறவிருக்கிற சரதேச திரைப்பட விழாவிலும் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்படவிருக்கிறது. இதனுடன் இந்தப் படத்திற்கு இன்னுமொரு கௌரவமாக பெங்களூருவில் விரைவில் நடைபெறவிருக்கிற 7-ஆவது சரவதேச திரைப்பட விழாவிலும் ‘குற்றம் கடிதல்’ திரையிட தேர்வாகியுள்ளது. இப்படத்தை கிறிஸ்ட் என்பவரின் ‘கிரிஸ்ட் பிக்சர்ஸ்’ நிறுவனமு, சதீஷின் ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;