சிங்கப்பூர் மருத்துவமனையில் ‘டிஸ்கோ சாந்தி’ அட்மிட்!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ‘டிஸ்கோ சாந்தி’ அட்மிட்!

செய்திகள் 19-Nov-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

80களிலும், 90களிலும் தமிழ் சினிமாவை கலக்கிய ‘குத்துப்பாட்டு டான்ஸர்’ டிஸ்கோ சாந்தி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி வந்த அவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

கணவர் இறந்தபிறகு டிஸ்கோ சாந்தியின் உடல்நிலையும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு அவருடைய கல்லீரலும் பாதிக்கப்பட்டிருப்பதால், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் டிஸ்கோ சாந்தி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;