‘லிங்கா’ கதை வழக்கு... கே.எஸ்.ரவிகுமார் பதில் மனு!

‘லிங்கா’ கதை வழக்கு... கே.எஸ்.ரவிகுமார் பதில் மனு!

செய்திகள் 19-Nov-2014 9:51 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் இயக்கிய ’முல்லைவனம் 999’ என்ற படத்தின் கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரவிரத்னம் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்து, ‘லிங்கா’ படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரஜினிகாந்த், இயக்குனர் ரவிகுமார் உட்பட ‘லிங்கா’ டீமின் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதோடு இன்று (நவம்பர் 19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘லிங்கா படத்தின் கதையும், மனுதாரரின் கதையும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை சார்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ‘லிங்கா’ படத்தின் கதை தனது கதை என்று மனுதாரர் கூற முடியாது. பென்னி குயிக்கின் வாழ்க்கை வரலாற்றுக்கு யாரும் உரிமை கோர முடியாது. லிங்கா படத்தின் அடிப்படை கதை பொன் குமரனுக்கு சொந்தமானது. இந்த கதை ‘கிங்கான்’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 15.10.2010 அன்று பதிவு செய்துள்ளார். எனவே, மேற்படி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோன்று ‘லிங்கா’ படத்தின் கதாசிரியர் பொன்குமரனும் பதில் மனு தாக்கல் செய்து, வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்திருக்கிறார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;