‘என்னை அறிந்தால்’ டீமின் இரட்டைக் கொண்டாட்டம்!

‘என்னை அறிந்தால்’ டீமின் இரட்டைக் கொண்டாட்டம்!

செய்திகள் 19-Nov-2014 9:33 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ பட டீம் இன்று இரண்டு பிறந்தநாள்களை கொண்டாட இருக்கிறது. ஆம்... இப்படத்தில் போலீஸாக நடிகர் விவேக்கும், வித்தியாசமான வில்லன் கேரக்டரில் நடிகர் அருண் விஜய்யும் நடிக்கிறார்கள். இந்த இருவருக்குமே இன்று (நவம்பர் 19) பிறந்தநாள்.

இன்றைய பிறந்தநாள் பிரபலங்களான விவேக்குக்கும், அருண் விஜய்க்கும் ‘என்னை அறிந்தால்’ படம் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பு எத்தனையோ வித்தியாசமான காமெடிப் பாத்திரங்களை விவேக் ஏற்றிருந்தாலும், இப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் போலீஸ் வேடம் சற்று மாறுபட்டது என அவரே குறிப்பிட்டிருக்கிறார். சீரியஸ் + சிரிப்பு கலந்த இந்த போலீஸ் கேரக்டருக்காக, அஜித்தைப் போலவே விவேக்கும் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் தோன்றியிருக்கிறார்.

அதேபோல், கிட்டத்தட்ட 20 வருட காலங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய், முதல்முறையாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். அதோடு அவர் இப்படத்தில் தோன்றும் கெட்அப்பும் இதுவரை அவர் தோன்றாத விதத்தில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் அருண் விஜய்.

காமெடியில் தனித்துவம் பெற்ற நடிகர் விவேக்கிற்கும், கடுமையான உழைப்பாளியான நடிகர் அருண் விஜய்க்கும் ‘டாப் 10 சினிமா’ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, ‘என்னை அறிந்தால்’ படம் பெரிய வெற்றியைப் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;