ஷங்கருடன் இணையும் விஜய், விக்ரம், ரஹ்மான்!

ஷங்கருடன் இணையும் விஜய், விக்ரம், ரஹ்மான்!

செய்திகள் 19-Nov-2014 9:00 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளும் படு பிஸியாக தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாக முடிவாகாத நிலையில், தன் உதவி இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கும் ‘கப்பல்’ படத்தை வாங்கி அதனை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஷங்கர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 22ஆம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ‘இமேஜ் ஆடிட்டோரிய’த்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இளையதளபதி’ விஜய், ‘சீயான்’ விக்ரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ‘கப்பல்’ படத்தில் இசைக்குறுந்தகடை ஏ.ஆர்.ரஹமானும், விஜய்யும் இணைந்து வெளியிட, ‘கப்பல் படத்தின்’ டிரைலரை விக்ரம் வெளியிடுகிறார்.

முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இன்னொரு இசையமைப்பாளரின் ஆல்பத்தில் இப்படத்திற்காகப் பாடியிருக்கிறார். ‘கப்பல்’ படத்தில் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைப்பில் ‘காலி பசங்கடா...’ என்ற பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிபாஷா பாசு ஐஸ் பக்கெட் சவால் - வீடியோ


;