பாரதிராஜா மனதார பாராட்டிய படம்!

பாரதிராஜா மனதார பாராட்டிய படம்!

செய்திகள் 18-Nov-2014 2:17 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி பரவலான மக்களின் ஆதரவை பெற்றும், விமர்சன ரீதியாகவும் நன்றாக பேசப்பட்டு வெற்றிப் பெற்ற படம் ‘வெண்நிலா வீடு’. இப்படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கத்தை மனதார பாராட்டியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. அந்த பாராட்டு விவரம் வருமாறு:

இன்று திரைப்படங்கள் வெட்டு, குத்து, வன்முறை என்று வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டது. இது பார்வையாளர்களின் குறைபாடு அல்ல, படைப்பாளிகளின் குறைபாடு. காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. கதை வரட்சியாக இருப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் ‘வெண்நிலா வீடு’ வெள்ளித்திரை சொல்ல மறந்த வெண்பனி வீடு. இந்த சமூகம் எவ்வளவுதான் விஞ்னான வளர்ச்சிக்கு தன்னை மாற்றிக் கொண்டாலும் வாழ்வியல் முறையில் அவன் கடந்து வந்த பாதை, பாசம், உறவுகள், மண்வாசனையை விட்டு விலகுவதில்லை.

குறைந்த செலவில் கதை, கதாபாத்திரம், உறவுகள் கொண்டு சரியான கலவையில் கட்டப்பட்ட உன்னுடைய ‘வெண்நிலா வீடு’ நமது கிராமத்தின் கலாசாரத்தை நான்கு அறைக்குள் வைத்து வீடு கட்டி விளையாடி வெற்றிக் கண்டது கண்டு பெருமையடைகிறேன். உனது வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;